திருமண ஆசை தனக்கும் இருப்பதாக நக்மா தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நக்மா. பாட்ஷா உட்பட பல படங்களில் பல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

நடிகை ஜோதிகாவின் உடன்பிறந்த சகோதரியான இவருக்கு தற்போது 48 வயதாகிறது. அரசியலில் ஈடுபட்டு வருகிறார். இன்னமும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வரும் நக்மா முதல் முறையாக திருமணம் குறித்து பேசியுள்ளார்.

அதாவது எனக்கு திருமணம் செய்து கொள்ள கூடாது என்ற எண்ணமெல்லாம் இல்லை. எனக்கும் திருமணம், குழந்தை என வாழ ஆசை இருக்கு.. அது நடக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம் என கூறியுள்ளார்.