வாரிசு படப்பிடிப்பு விஜய் செய்த செயலை சுவாரசியமாக நடிகை குஷ்பு பகிர்ந்துள்ளார்.

தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக பல முன்னணி நட்சத்திரங்களுடன் ஜோடியாக நடித்து தற்போது பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருபவர் நடிகை குஷ்பூ. இவர் தற்போது வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் வாரிசு திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

நாளை வெளியாக இருக்கும் இப்படம் குறித்த அப்டேட்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வரும் நிலையில் வாரிசு படப்பிடிப்பு தளத்தில் நடிகர் விஜயை குறித்து நேர்காணலில் நடிகை குஷ்பூ பகிர்ந்துள்ள தகவல் வைரலாகி வருகிறது.

அதில் அவர், வாரிசு படப்பிடிப்பில் இறுதி கட்ட படப்பிடிப்பின் போது தளபதி விஜய் அவர்களுக்கு 103 டிகிரி அளவிற்கு காய்ச்சல் இருந்தது. இருந்தாலும் அப்படைப்பிடிப்பை நிறைவு செய்யும் வரை அவர் நடுநடுவில் ஒரு கராசில் தரையில் பெட்ஷீட் போட்டு படுத்து ஓய்வெடுத்துக் கொண்டு அவரது காட்சிகளை முழுவதும் நடித்து முடித்தார். அவரது இந்த கடின உழைப்பு தான் இந்த வெற்றிக்கு காரணம் என்று நடிகை குஷ்பு சுவாரசியமான தகவலை பகிர்ந்திருக்கிறார். இந்த தகவல் தற்போது தளபதி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.