நடிகை குஷ்புவின் எமோஷனல் ட்விட் வைரல்.

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் குஷ்பூ. பல முன்னணி நட்சத்திரங்களுக்கு ஜோடியாக பல படங்களில் நடித்துள்ள இவர் தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இவர் தற்போது நடிகர் விஜய் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாக உள்ள வாரிசு திரைப்படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடிகை குஷ்புவின் மூத்த அண்ணன் உடல்நலைக்குறைவால் உயிரிழந்தார். இதனால் துக்கத்தில் ஆழ்ந்திருந்த நடிகை குஷ்பூ தற்போது அதிலிருந்து மீண்டு வருகிறார்.

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் “காலம் குணமாகும் என்கிறார்கள். யதார்த்தத்தை ஏற்றுக்கொள்ளவும், அதனுடன் வாழக் கற்றுக்கொள்ளவும் கற்றுக்கொடுக்கிறது. என் அண்ணன் போய்விட்டார், ஆனால் வாழ்க்கை தொடர வேண்டும். மீண்டும் பணிகள், கூட்டங்கள், அரசியல் பணிகள், தொடர்புடைய பயணம், படப்பிடிப்புகள் மற்றும் பல. என் சகோதரர் அதை விரும்புவார். அவர் எப்போதும் என்னுடன் இருப்பார், சிரித்து வழிநடத்துவார். என்று உணர்ச்சிகரமான பதிவை வெளியிட்டு இருக்கிறார். இதற்கு பலரும் நடிகை குஷ்புக்கு ஆறுதலான கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.