உருக்கமான பதிவிற்கு கிண்டல் அடித்த நபருக்கு நடிகை குஷ்பூ தரமான பதிலடி கொடுத்திருக்கிறார்.

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் குஷ்பூ. பல முன்னணி நட்சத்திரங்களுக்கு ஜோடியாக பல படங்களில் நடித்துள்ள இவர் தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இவர் தற்போது நடிகர் விஜய் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாக உள்ள வாரிசு திரைப்படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் குஷ்பூ தன்னுடைய மூத்த சகோதரருக்கு உடல் நலக் குறைபாடு ஏற்பட்டு இருப்பதாக பதிவின் மூலம் தெரிவித்திருந்தார். ஆனால் நேற்று முன்தினம் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக நடிகை தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

அதில் அவர், நீங்கள் உறவுகளை சாதாரணமாக எடுத்துக்கொள்கிறீர்கள். உங்கள் அன்புக்குரியவர்கள் எப்போதும் உங்களுடன் இருப்பார்கள் என்று கருதுங்கள். அவை மறைந்தவுடன், வலி ​​மிகவும் ஆழமானது, அது உங்கள் இதயத்தைத் துளைத்து, முன்பு இல்லாத அளவுக்கு உங்களுக்கு வலியை அளிக்கிறது. உங்கள் அன்புக்குரியவர்களை நீங்கள் உண்மையில் நேசிக்கிறீர்கள் என்று சொல்லத் தவறாதீர்கள். என்று பதிவிட்டிருந்தார்.

இப்படியான நிலையில் குஷ்புவின் இந்த உருக்கமான பதிவை கண்ட இனியவாசி ஒருவர், ‘அக்காவுக்கு சின்னத்தம்பி நினைப்பு வந்துருச்சு’ என்று கிண்டலாக கமெண்ட் செய்துள்ளார். இதனால் கோபமடைந்த குஷ்பூ அவருக்கு “என் செருப்பு சைஸ் 41, தைரியம் இருந்தா நேர்ல வா. இதுதான் உங்க கீழ் தனமான புத்தி, நீ எல்லாம் கலைஞர் ஃபாலோவர்னு சொல்லிக்க வெட்கப்படனும்” என்று அறிவாலயமை டேக் செய்து தரமான பதிலடி கொடுத்துள்ளார்.