இரட்டை குழந்தைகளுக்கு அப்பா அம்மாவாகியுள்ள விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா குறித்து நடிகை கஸ்தூரி சமூக வலைதள பக்கத்தில் பதிவின் மூலம் சர்ச்சையை கிளப்பி இருக்கிறார். இது குறித்து அவர் விளக்கம் அளித்து முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.

தென்னிந்திய சினிமாவில் லேடிஸ் சூப்பர் ஸ்டார் என புகழ் பெற்றவர் நடிகை நயன்தாரா. பல்வேறு படங்களில் பல நடிகர்களுடன் இணைந்து நடித்து வரும் இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை கிட்டத்தட்ட 8 வருடங்களாக காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்த சில மாதங்களே ஆனா நிலையில் இருவரும் குழந்தை பெற்றுக் கொள்ளப் போவதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வந்தன. அதே சமயம் நடிகை நயன்தாரா வாடகை தாய் மூலம் தான் குழந்தை பெற்றுக் கொள்ளப் போகிறார் எனவும் சொல்லப்பட்டது.

இப்படியான நிலையின் தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் நானும் நயனும் அப்பா அம்மாவாகி விட்டோம். இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்து இருப்பதாக புகைப்படத்தின் மூலம் அறிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து ரசிகர்கள் திரையுலக பிரபலங்கள் என பலரும் இவர்களது இந்த அறிவிப்பை பார்த்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இது ஒருபுறம் இருக்க திருமணமாகி 4 மாதங்களில் நயன்தாராவுக்கு குழந்தை பிறந்துள்ளது குறித்து சமூக வலைதளங்களில் விவாதப்பொருளாகியுள்ளது. இந்நிலையில் இது குறித்து நடிகை கஸ்தூரி தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு சர்ச்சையை கிளப்பி இருக்கிறார். அதில் அவர், மருத்துவக் காரணங்கள் தவிர்த்து வாடகைத் தாய் மூலம் குழந்தைப் பெற்றுக்கொள்வது இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டம் கடந்த ஜனவரி 2022 ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வந்தது. இதுபற்றி அடுத்த சில நாட்களுக்கு நாம் கேட்கப்போகிறோம் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு ரசிகர்களின் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இது குறித்து நடிகை கஸ்தூரி விளக்கம் கொடுத்து அந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். அப்பதிவில் அவர் வாடகை தாய் பற்றி சட்டம் என சொல்கிறது என்று மட்டுமே நான் பதிவிட்டுள்ளேன். என் பதிவில் தனிப்பட்ட யாரையும் நான் குறிப்பிடவில்லை. வியாபாரநோக்குடன் நயன்தாரா விக்னேஷ் சிவனை சம்பந்தப்படுத்தி அவதூறு செய்தி வெளியிட்ட , வெளியிடும் ஊடங்கங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பேன். என வெளியிட்டு இருக்கிறார். இது தற்பொழுது வைரலாகி வருகிறது.