நடிகை காஜல் அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குழந்தையின் புகைப்படத்தை பதிவிட்டு தாய்மை உணர்வை நெகிழ்ச்சியுடன் பதிவிட்டிருக்கிறாள்.

தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பல ரசிகர்களை கொள்ளை கொண்ட முன்னணி நடிகை தான் காஜல் அகர்வால். இவர் லாக்டவுன் நேரத்தில் கௌதம் கிச்சலு என்னும் மும்பை தொழிலதிபரை நீண்ட நாள் காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்பு கர்ப்பம் அடைந்திருந்த காஜல் அகர்வால் அண்மையில் அழகிய ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். தனது மகனுக்கு நீல்ஸ் கிச்சலு என்னும் அழகான பெயரை வைத்துள்ளார்.

குழந்தை பிறந்து நீண்ட மாதங்களுக்குப் பிறகு நடிகை காஜல் அகர்வால் மீண்டும் ஒரு சில படங்களில் நடிக்க தொடங்கி இருக்கிறார். இதற்கிடையில் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல போட்டோ ஷூட் புகைப்படங்களை பதிவிட்டு வரும் காஜல் தற்போது தனது மகனின் புகைப்படத்தை பதிவிட்டு தாய்மையின் நெகிழ்ச்சியான உணர்வை பகிர்ந்திருக்கிறார்.

அதில் அவர், தன் வாழ்க்கையில் ஆழமான மாற்றங்கள் ஏற்பட்ட இந்த ஆறு மாதங்கள் எப்படி இவ்வளவு வேகமாக போனது என்றே தெரியவில்லை என்று கூறியுள்ளார், மேலும் உன் அம்மாவாக இருப்பது மிகவும் சவாலான மதிப்புமிக்க வேலையாக கருதுகிறேன் என்றும் உணர்வு பூர்வமான நீண்ட பதிவை வெளியிட்டு இருக்கிறார்.