பாலிவுட் திரைப்படத்தில் நடிக்க இருக்கும் நடிகை ஜோதிகா குறித்த தகவல் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக வலம் வந்தவர் ஜோதிகா. ஏராளமான ரசிகர்களின் கனவு நாயகியாக உலா வரும் இவர் திருமணத்திற்குப் பிறகு நடிப்பதை குறைத்துக் கொண்டார். தற்போது மீண்டும் முதன்மை கதாபாத்திரங்களை கொண்டுள்ள திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்து வரும் இவர் தமிழ் மட்டுமின்றி தற்போது இந்தியிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

அந்த வகையில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு ஹிந்தி சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்க இருக்கும் ஜோதிகாவின் புதிய படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் தற்போது இணையத்தில் வெளியாகி ட்ரெண்டிங்காகி வருகிறது. அதன்படி ‘க்யூன்’ பட இயக்குனர் விகாஸ்பஹ்ல இயக்கத்தில் அஜய் தேவ்கன், மாதவன் ஆகியோர் நடிக்கும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஜோதிகா இணைந்திருப்பதாக அதிகாரப்பூர்வமான தகவலை இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.