
தன்னுடன் பிறந்த ட்வின் சகோதரனின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் லவ் டுடே இவானா.
தமிழ் சினிமாவில் பிரதீப் ரங்கநாதன் இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியான திரைப்படம் லவ் டுடே. சிறு பட்ஜெட்டில் வெளியாகும் மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படமான இந்த படத்தில் நாயகியாக நடிகை இவானா நடித்திருப்பார்.

இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதை தொடர்ந்து இவானாவுக்கும் ரசிகர் பட்டாளம் அதிகரித்தது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவ்வானா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது ட்வின் சகோதரனின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகிறது.