லேட்டஸ்டான ஆடையில் போட்டோ ஷூட் செய்து வெளியிட்டு இருக்கும் நடிகை இவானாவின் இன்ஸ்டா போஸ்ட் வைரலாகி வருகிறது.

தமிழ் திரை உலகில் வளர்ந்து வரும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் இவானா. இவர் நாச்சியார், ஹீரோ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதன் பிறகு கடந்த ஆண்டு லோ பட்ஜெட் திரைப்படமாக வெளியாகி மெகா ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்த லவ் டுடே திரைப்படத்தின் மூலம் அனைவருக்கும் பரிச்சயமான இவர் இப்படத்தை தொடர்ந்து LGM, கள்வன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இதற்கிடையில் சமூக வலைதள பக்கங்களிலும் ஆக்டிவாக இருந்து வரும் இவானா அடிக்கடி ரசிகர்களை கவரும் வகையில் புது புது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு கொண்டிருப்பார். அந்த வகையில் கலக்கலான கவர்ச்சி நிறைந்த ஆடையில் லேட்டஸ்ட்டாக எடுத்திருக்கும் போட்டோ ஷூட் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். அது தற்போது ட்ரெண்டிங்காகி வருகிறது.