நடிகை ஹன்சிகாவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் மாப்பிள்ளையின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஹன்சிகா. பல்வேறு படங்களில் பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ள இவர் உடல் எடை கூடி குண்டானதால் வாய்ப்பில்லாமல் இருந்த நிலையில் தற்போது எடையை குறைத்து மீண்டும் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

இந்த நிலையில் இவருக்கும் தொழிலதிபர் ஒருவருக்கும் திருமணம் நடக்க இருப்பதாகவும் இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் பரவிய நிலையில் தற்போது ஹன்சிகாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.

நடிகை ஹன்சிகா தன்னுடைய வருங்கால கணவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கு தன்னுடைய பியான்சியை அறிமுகம் செய்துள்ளார்.

புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஹன்சிகாவுக்கும் அவரது ஜோடிக்கும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இவர்கள் இருவருக்கும் ஜெய்ப்பூர் அரண்மனையில் டிசம்பர் மாதத்தில் திருமணம் நடக்க இருப்பதாக கூடுதல் தகவல்கள் கிடைத்துள்ளன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.