இயக்குனர் சீனு ராமசாமி சொன்னதே கேட்டு வருத்தம் அடைந்ததாக நடிகை காயத்ரி சமீபத்தில் எடுக்கப்பட்ட பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார்.

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் என்ற படத்தின் மூலம் அனைவருக்கும் பரிச்சயமான நடிகை தான் காயத்ரி. இப்படத்தை தொடர்ந்து இவர் பல படங்களில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்த அசத்தி இருக்கிறார். மேலும் நடிகர் கமல் ஹாசனின் விக்ரம் திரைப்படத்தில் பகத் பாசிலுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து மீண்டும் விஜய் சேதுபதியுடன் இணைந்து சீனு ராமசாமியின் இயக்கத்தில் உருவான மாமனிதன் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இப்படம் மக்களின் மத்தியில் அதிக அளவில் நல்ல வரவேற்பை பெற்று வந்தது. இந்நிலையில் இப்படத்தில் நடித்த அனுபவம் பற்றி ஒரு யூடியூப் சேனல் பேட்டியில் நடிகை காயத்ரி பேசியிருக்கிறார். அதாவது நான் மாமனிதன் படத்தில் ஒப்பந்தமானபோது அந்தக் கேரக்டர் 90களில் வரும் கதாபாத்திரம் என்று கூறியிருந்தனர். உடனே நான் இயக்குநர் சீனு ராமசாமி சாரிடம், சார் எனக்கு அந்தக் காலத்தில் எப்படி பெண்கள் இருப்பார்கள் என்பது போன்ற சில விஷயங்களைச் சொல்லுங்க நான் என்ன மாதிரி ஹோம் ஒர்க் பண்ணனும்னு சொல்லுங்க சார். அது மாதிரி நான் பண்ணிட்டு வரேன் என்றேன்.

உடனே சீனு சார், இங்க பாருங்க மா எங்க ஊரு பொண்ணுங்க புருவத்த திருத்த மாட்டாங்க.. அதனால நீங்க புருவத்த திருத்தீங்க என்றார். அதைக் கேட்க எனக்கு ரொம்ப கஷ்டமாத்தான் இருந்துச்சு ஆனால் படத்துக்காக முழுக்க முழுக்க நான் அப்படித்தான் இருந்தேன் என்று காயத்ரி அப்பேட்டில் கூறியிருக்கிறார்.