ஆடையை பற்றி சர்ச்சையை கிளப்பிய நடிகர் சதீஷ்குமாருக்கு பதிவின் மூலம் நடிகை தர்ஷா குப்தா பதிலடி கொடுத்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் முள்ளும் மலரும், செந்தூரப்பூவே ஆகிய சீரியல்களில் நடித்து பிரபலமான நடிகை தான் தர்ஷா குப்தா. இதனைத் தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளியில் போட்டியாளராக கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியின் மூலம் பல ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த இவர் தற்போது ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.

அந்த வகையில் தர்ஷா குப்தா நடிகை சன்னி லியோன் நடித்துள்ள ‘ஓ மை கோஸ்ட்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகை தர்ஷா குப்தா மற்றும் சன்னி லியோனின் ஆடையை பற்றி காமெடி நடிகர் சதீஷ் பேசியது சர்ச்சையை கிளப்பி இருந்தது.

இதற்கு நடிகர் சதீஷ் நடிகை தர்ஷா குப்தா கூறியதாலயே மேடையில் ஆடையை பற்றி சர்ச்சை ஏற்படுத்தும் வகையில் பேசியதாக கூறியிருந்தார். ஆனால் இதற்கு தர்ஷா குப்தா தனது சமூக வலைதள பக்கத்தில் “சதீஷ் நீங்கள் சொல்வது சரி இல்லை. யாராவது என்னைப் பற்றி நீங்கள் மேடையில் அசிங்கமாக பேசுங்கன்னு சொல்லுவாங்களா? எனக்கும் அன்னைக்கு ‘ஹேட் ஆச்சு’ ஆனால் அதனை நான் வெளியே காட்டவில்லை. ஆனால் நீங்கள் இப்போது கூறுவது தவறு” என்று பதிலடி கொடுத்துள்ளார்.