நடிகர் கமல்ஹாசன் நடிக்க இருக்கும் புதிய படத்தில் நடிகை ஆண்ட்ரியா நடிக்க இருப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய திரை உலகில் தவிர்க்க முடியாத மாபெரும் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் கமல்ஹாசன். இவர் தற்போது ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துவரும் இப்படத்தின் படப்பிடித்து சமீபத்தில் தென்னாப்பிரிக்காவில் நடந்து முடிந்ததை தொடர்ந்து இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் மே மாதத்தில் உருவாக உள்ளது.

இந்த படத்தை முடித்துவிட்டு நடிகர் கமல்ஹாசன் தனது அடுத்த படத்தை இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். அதன் பிறகு இயக்குனர் மணிரத்தினம் இயக்கம் இருக்கும் படத்திலும் நடிக்க இருக்கிறார். அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏற்கனவே வெளியாகிவிட்டது. இந்த படத்தை கமல்ஹாசன் தனது சொந்த நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்க உள்ளார்.

இதில் கதாநாயகியாக நடிகை நயன்தாரா நடிக்க இருப்பதாக தகவல் சமீபத்தில் வெளியாகி வைரலான நிலையில் மற்றொரு கதாநாயகியாக ஆண்டரியாவை நடிக்கவைக்க படக்குழு முயற்சித்து வருவதாக புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. ஏற்கனவே கமலுடன் மூன்று படங்களில் இணைந்து நடித்திருக்கும் ஆண்ட்ரியா இப்படத்தில் நடிப்பது உறுதியானால் இது கமலுடன் அவர் நடிக்கும் நாலாவது படமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.