திருமணம் குறித்த கேள்விக்கு பளிச்சென்று பதில் அளித்த ஐஸ்வர்ய லட்சுமி.

தென்னிந்திய திரை உலகில் பிரபல நடிகையாக திகழ்பவர் ஐஸ்வர்யா லட்சுமி. இவர் மணிரத்தினம் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற பொன்னியன் செல்வன் திரைப்படத்தில் பூங்குழலி கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அனைவரையும் கவர்ந்திருந்தார்.

திருமணம் குறித்த கேள்விக்கு… ஐஸ்வர்யா லட்சுமியின் பளீச் பதில்.!

இதனைத் தொடர்ந்து இவரது நடிப்பில் இன்று கட்ட குஸ்தி என்னும் திரைப்படம் வெளியாகி உள்ளது. இப்படத்தில் நடிகர் விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் எடுக்கப்பட்ட பேட்டியில் ஐஸ்வர்ய லட்சுமிடம் நீங்கள் காதல் திருமணம் செய்வீர்களா? இல்லை பெரியோர்களால் நிச்சயிக்கப்படும் திருமணம் செய்வீர்களா? என கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், ‘எனக்கு திருமணம் செய்து கொள்ள விருப்பமில்லை’ என்று பளிச்சென்று கூறியிருக்கிறார்.