அதிதி சங்கருக்கு கல்யாண விஷயத்தில் ஷங்கர் ஸ்ட்ரிக்ட் கண்டிஷனை போட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் ஷங்கர். இவரது இளைய மகள் அதிதி சங்கர் விருமன் படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமாகி சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மாவீரன் படத்தில் நடித்தார்.

இந்த இரண்டு படங்களும் வெற்றி பெற்றதை தொடர்ந்து அடுத்ததாக அதர்வாவின் தம்பி ஹீரோவாக நடிக்கும் படத்தில் நாயகியாக நடிக்க உள்ளார். இப்படியான நிலையில் சங்கர் இவருக்கு கல்யாண விஷயத்தை கண்டிஷன் ஒன்றை போட்டுள்ளார்.

ரெண்டு வருஷம் டைம் அதுக்குள்ள நீ எவ்வளவு படம் வேண்டுமானாலும் நடிச்சுக்கோ, அதன் பிறகு கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என ஸ்ட்ரிக்காக கூறியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனால் அதிதி சங்கர் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.