விளையாட்டு வீரர்களுக்கு உதவி செய்த விஷ்ணு விஷாலின் செயலை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகரும், தயாரிப்பாளருமாக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஷ்ணு விஷால். இவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான கட்ட குஸ்தி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதையடுத்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் லால் சலாம் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

கிரிக்கெட்டை மையமாகக் கொண்டு உருவாகி வரும் இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் கேமியோ கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். விளையாட்டின் மீது அதிக ஆர்வம் கொண்ட நடிகர் விஷ்ணு விஷால் தற்போது செய்திருக்கும் நெகிழ்ச்சியான செயல் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை குவித்து வருகிறது.

அதன்படி நடிகர் விஷ்ணு விஷால், தடகள வீரர்கள் 11 பேருக்கு நிதி உதவி வழங்க இருப்பதாக அறிவித்துள்ளார். பொருளாதாரத்தில் பின்தங்கி இருக்கும் விளையாட்டு வீரர்களுக்கு ஊக்குவிக்கும் விதமாக விளையாட்டு வீரர்கள் 11 பேருக்கு மாதம் தோறும் நிதி வழங்குவதாக தெரிவித்திருக்கிறார். இவரது இந்த நெகிழவைக்கும் செயலை ரசிகர்கள் பாராட்டி வைரலாக்கி வருகின்றனர்.