நடிகர் விஷால் தனது சமூக வலைதள பக்கத்தில் திடீரென்று வாழ்க்கை குறித்து மோட்டிவேஷனல் ட்விட் செய்திருக்கிறார். அது இணையத்தில் வைரலாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷால். தயாரிப்பாளர் ஜி. கே. ரெட்டியின் மகன் ஆவார். இவர் சினிமா துறையில் பிரபல நடிகராக வலம் வருவது மட்டுமின்றி தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளர் பணியிலும் இருந்து வருகிறார். இவரது நடிப்பில் விரைவில் லத்தி என்னும் திரைப்படம் திரைக்கு வர இருக்கிறது இதனைத் தொடர்ந்து மார்க் ஆண்டனி என்னும் திரைப்படத்தில் நடித்து வரும் நடிகர் விஷால் தற்போது திடீரென்று தனது சமூக வலைதள பக்கத்தில் வாழ்க்கை குறித்து மோட்டிவேஷனல் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

அதில் அவர் “வாழ்க்கை என்பது ஒரு கேமராவை போன்றது. உங்களுக்கு தேவையானதை, நல்ல தருணங்களில் மட்டும் கவனம் செலுத்துங்கள், சரியாக வரவில்லை என்றால் அடுத்தடுத்த கட்டத்தை நோக்கி நகருங்கள்”. என்று அனைவருக்கும் மோட்டிவேஷனல் செய்யும் விதமாக பதிவிட்டு இருக்கிறார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.