நடிகர் விஷால் மார்க் ஆண்டனி படக்குழுவினருடன் தளபதி விஜய்யை நேரில் சந்தித்துள்ளார்.

கோலிவுட் திரை உலகில் தவிர்க்க முடியாத முன்னணி நட்சத்திரமாக வளம் வருபவர் நடிகர் விஷால். ரசிகர்களால் புரட்சித்தளபதி என்று அழைக்கப்பட்டு வரும் இவர் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் “மார்க் ஆண்டனி” திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

இதில் விஷாலுக்கு ஜோடியாக நடிகை ரித்து வர்மா நடிக்க எஸ் ஜே சூர்யா, சுனில், கிங்ஸ்லி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். ஜிவி பிரகாஷ் குமார் இசையமைப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ் சமீபத்தில் வெளியாகி வைரலானது.

அதன் பிறகு படப்பிடிப்பை நிறைவு செய்திருக்கும் மார்க் ஆண்டனி படக்குழு இன்று மாலை 6:30 மணிக்கு இப்படத்தின் டீசர் வெளியாக இருப்பதை சில தினங்களுக்கு முன்பு அறிவித்திருந்தது. இந்நிலையில் இப்படத்தின் டீசரை இன்று மாலை தளபதி விஜய் அவர்கள் வெளியிடப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக நடிகர் விஜய்யை மார்க் ஆண்டனி படக்குழுவினருடன் நடிகர் விஷால் அவரது இல்லத்திற்கு நேரில் சென்று சந்தித்துள்ளார். அதன் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.