பிரபல தமிழ் நடிகைக்கு நடிகர் வினயுடன் திருமணம் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Actor Vinay Marriage Details : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் வினய். பல்வேறு படங்களில் நாயகனாக நடித்த இவர் தற்போது வில்லனாக டாக்டர், எதற்கும் துணிந்தவன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வரும் வினய் பிரபல நடிகை விமலா ராமன் காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இருவருக்கும் வெகு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த தகவல் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில் வினய் விமலா ராமனுடன் ஆஸ்திரேலியா சென்றுள்ள புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

விமலா ராமன் தமிழில் வெளியான ராமன் தேடிய சீதை, இருட்டு, பொய் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.