ஜனநாயகன் படம் குறித்து கேட்ட கேள்வி.. நைசாக நழுவிய நடிகர் விமல்.. என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க.!!
ஜனநாயகன் படம் குறித்த கேள்விக்கு விமல் பதிலளித்துள்ளார்.

actor vimal answer for jananayagan movie question
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய்.இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி ஒன்பதாம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருந்தது. எச். வினோத் இயக்கத்திலும் கே.வி.என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவான இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்தார்.
ஆனால் சென்சார் பிரச்சனை காரணமாக இந்த திரைப்படம் பல சிக்கல்களை சந்தித்து வருகிறது இதனால் படக்குழு படத்தின் ரிலீஸை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளனர்.
இதுகுறித்து பல்வேறு தரப்பினரும் அவர்களது கருத்து தெரிவித்து வரும் நிலையில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஏழாம் பொருத்தம் என்ற படத்தில் நடித்து கொண்டிருப்பதாகவும் அடுத்தடுத்த படங்கள் வெளியாகும் எனவும் சொல்லியிருந்தார்.
பிறகு அவரிடம் ஜனநாயகன் படத்தின் சென்சார் விஷயம் குறித்து பத்திரிக்கையாளர்கள் கேட்க அதெல்லாம் எனக்கு தெரியாதுங்க அவங்க இஷ்டம் நன்றி வணக்கம் இப்படிக்கு உங்களிடமிருந்து விடை பெறுவது விமல் என ஜாலியாக சொன்ன அவரிடம் மீண்டும் இது குறித்து கேட்டபோது என்கிட்ட போய் இது மாதிரியான பிரச்சனை எல்லாம் கேட்டா எனக்கு என்ன தெரியும் என்று கூறியுள்ளார்.
இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

actor vimal answer for jananayagan movie question
