நடிகர் விக்ரமின் துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விக்ரம். ஏராளமான ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து நடிகர் விக்ரம் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் தங்கலான் திரைப்படத்தில் தீவிரமாக நடித்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகளும் இறுதிக்கட்டத்தை எட்டி இருக்கும் நிலையில் கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் கடந்த 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட “துருவ நட்சத்திரம்” திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அப்டேட் வைரலாகி வருகிறது.

அதாவது, கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் இப்படத்தில் நடிகை ரித்து வர்மா கதாநாயகியாக நடிக்க பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். சில பல காரணங்களால் தள்ளிப்போன இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மீண்டும் சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டதை தொடர்ந்து வேகமாக உருவாகி வருகிறது. இந்த நிலையில் ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த இப்படம் வரும் ஜூலை 14ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக லேட்டஸ்ட் தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் அதே நாளில் சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படம் ரிலீஸ் ஆக இருப்பது குறிப்பிடத்தக்கது.