நடிகர் வடிவேலுவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி காமெடி நட்சத்திரமாக வலம் வருபவர் வைகைப்புயல் வடிவேலு. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தனது காமெடியால் ரசிக செய்திருக்கும் இவர் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் சினிமாவில் ரீஎன்றி கொடுத்திருக்கும் வடிவேலு நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்தின் வெளியீட்டைத் தொடர்ந்து மாமன்னன், சந்திரமுகி 2 உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் வடிவேலுவுக்கு, ஓய்வு பெற்ற நீதிபதி வள்ளிநாயகம் தலைமையில் இயங்கும் சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமைகள் ஆணையம் பொழுதுபோக்கு பிரிவின் கீழ் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளனர். இந்த தகவல் தற்போது ரசிகர்களை உற்சாகப்படுத்தியதோடு இணையத்தில் வைரலாகியும் வருகிறது.