சூர்யா 42 திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக தீவிரமாக உடற்பயிற்சி செய்யும் சூர்யாவின் வீடியோ வைரலாகி வருகிறது.

கோலிவுட் திரை உலகில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் மொத்தம் பத்து மொழிகளில் 3டி தொழில்நுட்பத்துடன் பிரம்மாண்டமாக உருவாகி வரும் சூர்யா 42 என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டிருக்கும் படத்தில் நடித்து வருகிறார்.

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பில் உருவாகி வரும் இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி கதாநாயகியாக நடித்து வருகிறார். வரலாற்று பின்னணியில் பயங்கரமாக உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் இப்படத்திற்காக தீவிரமாக உடற்பயிற்சி செய்து வரும் நடிகர் சூர்யாவின் வீடியோவை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இதனை கண்ட ரசிகர்கள் லைக்குகளை குவித்து ரீட்வீட் செய்து வைரலாக்கி வருகின்றனர்.