ரசிகையின் மறைவிற்கு அஞ்சலி செலுத்திய சூர்யா கடிதம் மூலம் அவரது பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.

தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் சூர்யா. இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் ஹிஸ்டாரிக்கல் திரைப்படமாக உருவாகும் கங்குவா திரைப்படத்தில் நடித்து வருகிறார். பத்து மொழிகளில் 3d தொழில்நுட்பத்துடன் வெளியாக இருக்கும் இப்படத்தில் ஏராளமான முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் நடிகர் சூர்யா தனது ரசிகையின் திடீர் மறைவிற்கு அஞ்சலி செலுத்தி வெளியிட்டிருக்கும் உருக்கமான கடிதம் வைரலாகி வருகிறது.

அதாவது, நடிகர் சூர்யாவின் தீவிர ரசிகையான ஐஸ்வர்யா அமெரிக்காவில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் உயிரிழந்திருக்கிறார். ஹைதராபாத்தை சேர்ந்த ஐஸ்வர்யா உயிரிழந்ததை அறிந்த நடிகர் சூர்யா தனது ரசிகைக்காக அவரது வீட்டில் அஞ்சலி செலுத்தி இருக்கிறார். மேலும் அந்த ரசிகையின் குடும்பத்தினருக்கு ஆறுதலான கடிதத்தை எழுதி அனுப்பியதுடன் தொலைபேசி மூலமும் தனது ஆறுதலை தெரிவித்திருக்கிறார். அதன் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் ரசிகர்களால் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.