டாடா திரைப்படம் குறித்து நடிகர் சூரி அளித்திருக்கும் நெகிழ்ச்சியான பேட்டியின் தகவல் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூரி. ரசிகர்களால் அன்போடு பரோட்டா சூரி என்று அழைக்கப்பட்டு வரும் இவர் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் விடுதலை திரைப்படத்தில் முதல்முறையாக கதாநாயகனாக நடித்திருக்கிறார். விரைவில் திரைக்கு வர இருக்கும் இப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் பிக் பாஸ் பிரபலமும் பிரபல நடிகருமான கவின் நடிப்பில் சமீபத்தில் வெளியான டாடா திரைப்படம் குறித்து நடிகர் சூரி நெகிழ்ச்சியுடன் அளித்திருக்கும் பேட்டியில் தகவல் தற்போது வைரலாகி வருகிறது.

அப்பேட்டியில் சூரி அவர்கள், டாடா மிகவும் அற்புதமான படம், செல்போனை பார்க்காமல் நீண்ட நாட்களுக்குப் பிறகு முழு படத்தையும் பார்த்திருக்கிறேன். கண்களில் தண்ணீர் வரும் அளவிற்கு படத்தில் எந்த அளவிற்கு சிரிப்பு இருக்கிறதோ அந்த அளவிற்கு இறுதியில் அழவும் வைத்துள்ளது. மிகவும் தரமான திரைப்படத்தை கொடுத்த படக்குழுவினர் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். என்று பேட்டியில் கூறியிருக்கிறார்.