ஹீரோவானதும் நடிகர் சூரி சம்பளத்தை உயர்த்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

Actor Soori Salary for Upcoming Movies : தமிழ் சினிமாவின் காமெடி நடிகராக பயணத்தை தொடங்கி தற்போது ஹீரோவாக வலம் வர தொடங்கியுள்ளார் நடிகர் சூரி. வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி ஹீரோவாக நடித்த விடுதலை திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. 

இதனைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகமும் வெகுவிரைவில் வெளியாக உள்ளது. மேலும் நடிகர் சூரி கொட்டுக்காளி, கருடன் ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். 

கருடன் படத்தை துரை செந்தில்குமார் இயக்க சசிகுமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த நிலையில் தற்போது நடிகர் சூரி ஒரு படத்திற்கு ரூபாய் எட்டு கோடி வரை சம்பளம் வாங்கி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

ஹீரோவாக நடிக்க தொடங்கியதும் சூரியின் சம்பளம் கிடுகிடுவென உயர்ந்ததாக கோலிவுட் வட்டாரங்களில் சொல்லப்படுகிறது. 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.