நடிகர் ஷாருக்கான் நயன்தாராவை அவரது இல்லத்திற்கு சென்று சந்தித்துள்ளார்.

பாலிவுட் திரை உலகில் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர் ஷாருக்கான். இவர் தற்போது அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் ஜவான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கும் நடிகர் ஷாருக்கானுக்கு ஜோடிகளாக நயன்தாரா மற்றும் தீபிகா படுகோனே நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் அண்மையில் வெளியான பதான் திரைப்படத்தின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக நடிகர் ஷாருக்கான் நேற்று சென்னை வந்துள்ளார். அந்நிகழ்ச்சிக்கு பின்னர் நடிகை நயன்தாராவை இல்லத்திற்கு சென்று அவர் சந்தித்துள்ளார். அதன் பிறகு வெளியே வந்த ஷாருக்காணை காண அப்பகுதி மக்கள் சுற்றி வளைத்தனர். அதன் வீடியோக்கள் தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகிறது.