ஜவான் திரைப்படத்திற்காக சென்னைக்கு வந்திருக்கும் நடிகர் சாருக் கான் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்திருக்கும் நிலையில் ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

கோலிவுட் திரை உலகில் பிரபல முன்னணி இயக்குனராக திகழ்பவர்தான் அட்லி. இவர் இயக்கத்தில் வெளியான ராஜா ராணி, தெறி, மெர்சல் ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்ததை தொடர்ந்து தற்போது பாலிவுட்டில் முதல்முறையாக நடிகர் ஷாருக்காணை கதாநாயகனாக வைத்து ஜவான் என்னும் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

இதில் இரட்டை வேடத்தில் நடித்துவரும் ஷாருக்காணீறுக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோன் மற்றும் நயன்தாரா ஆகியோர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பிற்காக சென்னைக்கு வந்திருக்கும் நடிகர் ஷாருக்கான் ஜவான் படம் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

அதில் அவர், இந்த 30 நாட்கள் சிறந்த கவனிப்பு இருந்தது, தலைவர் ரஜினிகாந்த் எங்கள் செட்டிற்கு வந்தார், நயன்தாராவுடன் படம் பார்த்தேன், அனிருத் உடன் பார்ட்டி செய்தேன், விஜய் சேதுபதியுடன் ஆழமாக விவாதித்தேன்,விஜய் எனக்கு ருசியான உணவு அளித்தார், அட்லி பிரியா உங்களின் விருந்தோம்பலுக்கு நன்றி. இப்போது சிக்கன் 65 செய்முறை நான் கற்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். அது தற்பொழுது வைரலாகி வருகிறது.