பிரபல காமெடி நடிகருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக ஏ1 வடக்குப்பட்டி ராமசாமி உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து பிரபலமானவர் சேசு.
இவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்ட காரணத்தினால் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் உடல்நிலை குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.