மரணம் வரை சரத் பாபுவின் ஆசை நிறைவேறாமல் போனதை பற்றி தெரிந்து ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் முன்னணி நடிகராக நடித்து மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர் சரத்பாபு.

கடந்த சில மாதங்களாகவே உடல் நலக்குறைபாடு காரணமாக ஹைதராபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர் சில தினங்களுக்கு முன்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையடுத்து இவரது உடல் சென்னை தி நகரில் உள்ள வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது. திரையுலக பிரபலங்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

இப்படியான நிலையில் சரத் பாபுவிற்கு ஒரு போலீஸ் அதிகாரியாக ஆக வேண்டும் என்பதுதான் மிகப்பெரிய கனவாக இருந்துள்ளது, ஆனால் அவருக்கு கிட்ட பார்வை பிரச்சனை இருந்ததால் போலீசாக முடியாத சூழ்நிலை உருவாகவே அதன் பிறகு நடிப்பின் மீது ஆர்வம் வந்து நடிக்க வந்துள்ளார்.

மரணம் வரை அவருடைய ஆசை நிறைவேறாமல் போனதால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.