Actor sanchari Vijay passes away

கன்னட திரையுலக நடிகரான சஞ்சாரி விஜய் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

Actor sanchari Vijay passes away : கன்னட சினிமாவில் பிரபல நடிகராக பிரிந்தவர் சஞ்சாரி விஜய். இவர் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

இவர் கன்னடத்தில் சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் பெற்றுள்ளார். இப்படியான நிலையில் இவர் சாலை விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மேலும் இவரின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டுள்ளன. இவரின் இந்த மறைவு கன்னட திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.