எனக்கு தூக்கம் வருது.. ரோபோ சங்கரின் கடைசி வார்த்தை.கண் கலங்கிய அவரது அண்ணன்.!!

Web Ads

ரோபோ சங்கர் பேசிய கடைசி வார்த்தையை சொல்லி அவரது அண்ணன் கண்கலங்கி உள்ளார்.

actor roboshankar in last speech update

actor roboshankar in last speech update

விஜய் டிவியில் தனது காமெடி பயணத்தை தொடங்கிய இவர் வெள்ளித் திரையில் பல படங்களில் நடித்த தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் ரோபோ சங்கர் என்றே சொல்லலாம்.

ஏற்கனவே இவருக்கு மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு குணமாகி மீண்டு வந்த நிலையில் திடீரென படப்பிடிப்பின் போது மயங்கி விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று மறைந்தார்.

இவரின் இழப்பு அவர்களது குடும்பத்தை கடும் சோகத்தில் உள்ளாக்கி இருக்கும் நிலையில் இவரது அண்ணன் ரோபோ சங்கர் கடைசியாக கூறிய வார்த்தைகள் குறித்து கண்கலங்கி பேசியுள்ளார்.

அதாவது எப்போதுமே ஷங்கர் தூக்கம் வரவில்லை என்று சொல்லிக் கொண்டே இருப்பான். எட்டு மணிக்கு படப்பிடிப்பு போக வேண்டும் என்றால் 4 மணிக்கு எழுந்து தூக்கம் வரவில்லை என டிவி போட்டு உட்கார்ந்து விடுவார் எனக் கூறியிருக்கிறார் ஆனால் தற்போது அன்னைக்கு கடைசியாக எனக்கு தூக்கம் வருது நான் கொஞ்ச நேரம் தூங்க போறேன்னு சொன்னான் அதுதான் இவன் கடைசியாக பேசிய வார்த்தை என கூறியுள்ளார்.

இவரின் இந்த பேச்சை இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. பலரும் ரோபோ ஷங்கரின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

actor roboshankar in last speech update

actor roboshankar in last speech update