மனைவிகளால் ஏற்படும் மன அழுத்தங்களை பிரதிபலிக்கும் ‘ப்ரோகோட்’ டீசர், வைரல்..

Web Ads

ரவிமோகன் தனது பெயரில் சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார். இந்த நிறுவனம் சார்பில் தயாரிக்கப்படும் படங்கள் குறித்த அறிவிப்பையும் வெளியிட்டிருந்தார்.

இதில் ‘டிக்கிலோனா’ பட இயக்குநர் கார்த்திக் யோகி இயக்கும் ‘ப்ரோகோட்’ படத்தை ரவிமோகன் தயாரித்து நடிக்கிறார். இதில் ரவியுடன் எஸ்.ஜே. சூர்யா, மலையாள நடிகர் அர்ஜுன் அசோகன், கன்னட நடிகர் உபேந்திரா, கவுரி பிரியா, ஷ்ரத்தா ஸ்ரீநாத், மாளவிகா மனோஜ், ஐஸ்வர்யா ராஜ் உள்பட பலரும் நடிக்கவுள்ளனர்.

இந்நிலையில், இப்படத்துக்கான அறிமுக டீசர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. 5 நிமிடம் ஓடும் இந்த டீசரில், மனைவிகளால் ஏற்படும் அழுத்தங்களை வெளியில் சொல்லாமல் உள்ளுக்குள்ளேயே வைத்துக் கொண்டு வெளியே சிரிக்கும் மூன்று கணவன்களைப் பற்றிய அறிமுகம் காட்டப்படுகிறது.

குடும்ப வாழ்விலிருந்து எப்படி தப்பித்து வெளியேறுவது எனவும் வாசகம் சொல்லப்படுகிறது. இந்த டீசர் தற்போதைய ரவிமோகன் வாழ்வியலை பிரதிபலிக்கிறதோ எனவும் நெட்டிசன்ஸ் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஏனெனில், இந்த படத்தின் தயாரிப்பாளர் ரவிமோகன் தான்.

டீசரில் தம்பதிகளாக வரும் ஸ்ரத்தா ஸ்ரீநாத் – எஸ்.ஜே.சூர்யா, அர்ஜுன் அசோகன் – மாளவிகா மனோஜ், ரவிமோகன் – கவுரி பிரியா இடையிலான காட்சிகள் ரசிக்க வைக்கின்றன. குறிப்பாக பின்னணியில் இளையாராஜாவின் ‘கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே’ பாடல் வரும் இடம் அருமையான பொருந்தியுள்ளது. தற்போது இந்த டீசர் வலைதளங்களில் கவனம் ஈர்த்து வருகிறது. மேலும், ரவிமோகன் இயக்கத்தில் ஃபேமிலி ட்ராமா ஜானரில் யோகிபாபு நடிக்கவுள்ளார்.

ravi mohan is set to take on the role of director
ravi mohan is set to take on the role of director