காமெடி நடிகர் மயில்சாமியின் கடைசி ஆசை குறித்த கேள்விக்கு நடிகர் ரஜினிகாந்த் அளித்திருக்கும் பேட்டி வைரலாகி வருகிறது.

கோலிவுட் திரை உலகில் பிரபல முன்னணி காமெடி மற்றும் குணச்சித்திர நடிகராக வலம் வந்தவர் மயில்சாமி. தனது நகைச்சுவை மூலம் ரசிகர்கள் மனதில் தனக்கென தனி இடம் பிடித்திருக்கும் இவர் நேற்றைய தினம் திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பால் மரணமடைந்தார். இந்த தகவல் ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் மயில்சாமி குறித்து நடிகர் ரஜினிகாந்த் அளித்திருக்கும் பேட்டி வைரலாகி வருகிறது.

அதில் அவர், எனது நெருங்கிய நண்பரான மயில்சாமி சிவராத்திரி அன்று காலமானது தற்செயலாக நடந்தது இல்லை, அது இறைவனது கணக்கு தனது தீவிர பக்தனை அவருக்கான உகந்த நாளில் சிவன் அவரை அழைத்துக் கொண்டதாக உருக்கமாக கூறியுள்ளார். அதன் பிறகு நான் சிவனுக்கு பால் அபிஷேகம் செய்ய வேண்டும் என்ற மயில்சாமியின் கடைசி ஆசையை விரைவில் நிறைவேற்றுவேன் என்றும் அப்பேட்டியில் கூறியிருக்கிறார். அது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.