பார்த்திபனின் “இரவின் நிழல்” படத்தின் மேக்கிங் வீடியோவை பார்த்து மெய் சிலிர்த்துப் போன நடிகர் ரஜினி வீடியோ பதிவின் மூலம் பார்த்திபனை பாராட்டியுள்ளார்.

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர் மற்றும் நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் பார்த்திபன். இவரின் ‘ஒத்த செருப்பு’ படத்திற்கு பிறகு பார்த்திபன் இயக்கி நடித்திருக்கும் படம் தான் “இரவின் நிழல்”. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் வரலட்சுமி சரத்குமார், ரோபோ ஷங்கர் ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்தை புதிய முயற்சியாக 94 நிமிடம் 36 நொடிகள் வைத்து ஒரே சாட்டில் எடுத்துள்ளனர். இந்த இரவின் நிழல் திரைப்படம் நாளை திரையரங்கில் வெளியாக இருக்கும் நிலையில் இப்படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இது குறித்து நடிகர் ரஜினிகாந்த் ஒரு வீடியோ பதிவின் மூலம் இப்படத்தை பாராட்டியுள்ளார்.

அதில் ஒவ்வொரு முறையும் ஒரு தனித்துவமான படத்தை உருவாக்கும் பார்த்திபனின் முயற்சியை புகழ்ந்துள்ளார். மேலும் இப்படத்தின் 29 நிமிடம் மேக்கிங் வீடியோவை பார்த்து மெய்சிலிர்த்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார். அதன் பின் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டிருக்கும் இப்படத்தின் முயற்சியை பாராட்டி ரஜினிகாந்த் படக்குழுவினர்கள் அனைவரும் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்தியுள்ளார். இந்த வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.