நடிகர் பார்த்திபன் தனது சமூக வலைதள பக்கத்தில் சிம்புவுடன் கூட்டணி வைக்கப் போவதாக பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

கோலிவுட் திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக பயணத்தை தொடங்கி தற்போது முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் சிம்பு. இவரது நடிப்பில் அண்மையில் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்ததை தொடர்ந்து நடிகர் சிம்பு தற்போது ஜில்லுனு ஒரு காதல் திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகும் 10 தல திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் சிம்புவுடன் தான் கூட்டணி வைக்கப் போவதாக கோலிவுட் திரை உலகில் பிரபல இயக்குனர் மற்றும் நடிகராக வலம் வரும் பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவின் மூலம் வெளியிட்டு இருக்கிறார். அது தற்போது வைரலாகி வருகிறது. அதில் அவர், நடிகர் சிம்பு விசேட திறமை பெற்றவர். பெற்றோரிடமும் தான் பெற்ற அனுபவத்திலிருந்தும் கற்றுக்கொண்டவர். இருவரும் சந்தித்துக்கொள்ளும் நாட்களில் மட்டும் நாங்கள் இணைய உள்ள அடுத்த படம் குறித்து பேசுவோம். அப்படி இணையும் நாளில் வெற்றி நிச்சயம் என்று அப்பதிவில் பகிர்ந்திருக்கிறார்.