இயக்குனர் பார்த்திபன் தனது சமூக வலைதள பக்கத்தில் புதிய படத்திற்கான தலைப்பை பகிர்ந்திருக்கிறார்.

தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி இயக்குனர் மற்றும் நடிகராக வலம் வருபவர் பார்த்திபன். இவரது இயக்கத்தில் கடந்த ஆண்டில் வெளியான ஒத்த செருப்பு மற்றும் இரவு நிழல் ஆகிய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றிருந்தது.

இதனைத் தொடர்ந்து மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் சின்ன பழுவேட்டையராக நடித்து அசதியிருந்தார். தற்போது பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தில் நடித்து வரும் இவர் தனது twitter பக்கத்தில் அவர் அடுத்ததாக இயக்கவிருக்கும் புதிய படத்திற்கான டைட்டிலை பகிர்ந்திருக்கிறார்.

அதன்படி, அவர் மனதை வருடும் மயிலிறகாய் வாழ்த்துங்கள், என்று பதிவிட்டு அப்படத்திற்கு “52 ஆம் பக்கத்தில் ஒரு மயிலிறகு” என்ற தலைப்பு வைக்கப்பட்டிருப்பதை தெரிவித்துள்ளார். இப்படத்திற்கான போஸ்டரை சற்று கவனித்து பார்க்கும்போது தந்தை மகள் பாசத்தை உணர்த்தும் கதை அம்சமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இப்படம் பற்றின தகவல்கள் விரைவில் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.