லியோ திரைப்படத்தில் நடிக்க இருப்பது குறித்து நடிகர் மன்சூர் அலிகான் அளித்துள்ள பேட்டி தற்போது வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் மன்சூர் அலிகான். பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களின் வில்லன் கதாபாத்திரங்களில் மிரட்டலாக நடித்து தனக்கென தனி இடம் பிடித்திருக்கும் இவர் நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் விஜயுடன் இணைந்து நடிக்க இருக்கிறார்.

அதன்படி, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் நடிக்க இருக்கும் இவர் இப்படம் குறித்து சமீபத்தில் அளித்திருக்கும் பேட்டி தற்போது பயங்கரமாக வைரலாகி வருகிறது.

அதில் அவர், இன்னும் நான் லியோ படத்தில் நடிக்கவே ஆரம்பிக்கவில்லை. இனிமேல் தான் எனது காட்சிகளின் படப்பிடிப்பு நடைபெற்று. ஏற்கனவே காஷ்மீர் படப்பிடிப்பு நிறைவடைந்த பிறகு தான் எனது காட்சிகள் படமாக்கப்படும் என்று கூறி அதற்கான தேதிகளையும் வழங்கியுள்ளனர். என்று தெரிவித்திருக்கிறார். மேலும், தேவா திரைப்படத்தை தொடர்ந்து தளபதி விஜய் உடன் நீண்ட இடைவேளைக்கு பிறகு லியோ படத்தில் இணைந்து நடிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி என்று தெரிவித்திருக்கிறார்.