நடிகர் மாதவன் தனது ட்விட்டர் பக்கத்தில் நியூ லுக் செல்ஃபி புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார்.

தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் மாதவன். இவர் கடந்த ஆண்டு வெளியான ராக்கெட்ரி தி நம்பி எக்ஸ்போர்ட் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் தனுஷின் திருச்சிற்றம்பலம் திரைப்படத்தை இயக்கிய பிரபல இயக்குனரான மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவாக இருக்கும் புதிய திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.

இது தொடர்பான அதிகாரவபூர்வமான அறிவிப்பு அண்மையில் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் வைரலானது. இந்நிலையில் நடிகர் மாதவன் அலைபாயுதே ஸ்டைலில் இருக்கும் அவரது லேட்டஸ்ட் செல்ஃபி புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு “புதிய லுக்கில், புதிய ப்ராஜெக்ட் உற்சாகத்துடன்” என்று குறிப்பிட்டு பகிர்ந்திருக்கிறார். அதற்கு ரசிகர்கள் அனைவரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.