டாடா திரைப்படத்தை போன் செய்து பாராட்டிய நடிகர் தனுஷ் குறித்து நடிகர் கவின் பகிர்ந்திருக்கும் தகவல் வைரலாகி வருகிறது.

தமிழில் சின்னத்திரை மூலம் பயணத்தை தொடங்கி தற்போது வெள்ளி திரையில் பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் கவின். நட்புனா என்னன்னு தெரியுமா என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமான கவின் அப்படத்திற்கு பிறகு லிப்ட் என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருந்ததை தொடர்ந்து இவரது நடிப்பில் அண்மையில் டாடா திரைப்படம் வெளியானது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் பல உச்ச நட்சத்திரங்கள் இப்படத்தை பாராட்டி வருகின்றனர்.

அந்த வகையில் நடிகர் தனுஷ் இப்படத்தின் கதாநாயகனான கவினுக்கு போன் செய்து தனது பாராட்டுகளை தெரிவித்து இருக்கிறார், அதில் அவர், டாடா படம் அற்புதமாக உள்ளது என்றும் உங்களின் அனைத்து படங்களையும் பார்த்து உள்ளேன் சிறப்பாக நடிக்கிறீர்கள் என்று தனது வாழ்த்துக்களை கூறி பாராட்டியுள்ளார்.

இது குறித்து கவின் தனது ட்விட்டர் பக்கத்தில், நன்றி தனுஷ் சார் உங்களிடமிருந்து ஒரு அழைப்பைப் பெறுவதை ஒரு எளிய நன்றியால் சுருக்கிவிட முடியாது. உங்களின் வாத்தி திரைப்படத்திற்கும் எனது வாழ்த்துக்கள், சினிமாவில் உங்களிடமிருந்து நிறைய விஷயங்களை கற்றுக் கொள்ள ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன் சார். என்று குறிப்பிட்டு அறிக்கையாக வெளியிட்டு இருக்கிறார். இதற்கு ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.