நடிகர் கவினின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் பிரபல நடிகராக திகழ்பவர் கவின். சின்னத்திரையில் அறிமுகமாகி பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் அனைவருக்கும் பரிச்சயமான இவரது நடிப்பில் சில மாதங்களுக்கு முன்பு வெளியான டாடா திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இதனைத் தொடர்ந்து நடிகர் கவின் அடுத்ததாக பிரபல டான்ஸ் மாஸ்டர் சதீஷ் இயக்கும் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி பரவலாக பேசப்பட்டு வந்த நிலையில் சில காரணங்களால் அது தள்ளி போனது.

இந்த நிலையில் கவின் அடுத்து எந்த இயக்குனருடன் இணைவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வந்தது. தற்போது ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான பியார் பிரேமா காதல் என்னும் படத்தை இயக்கி பிரபலமான இயக்குனர் எலனுடன் இணைந்து கவின் தனது அடுத்த படத்தை நடிக்க இருப்பதாக புதிய தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது.