சர்தார் வெற்றியை கொண்டாடும் விதமாக நடிகர் கார்த்தி வழங்கிய பரிசின் புகைப்படம் வைரலாகி வருகிறது.

மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் கார்த்தி நடிப்பில் தீபாவளியை பண்டிகையை முன்னிட்டு கடந்த அக்டோபர் 21ஆம் தேதி அனைத்து திரையரங்குகளிலும் வெளியான “சர்தார்” திரைப்படம் ரசிகர்களின் இடையே வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவான இப்படத்தில் மிரட்டலான வில்லன் கதாபாத்திரத்தில் பிரபல இந்தி நடிகர் சங்கி பாண்டே நடிக்க ராஷிகண்ணா, ரெஜிஷா விஜயன், லைலா, யுகி சேது, முனிஷ்காந்த், மாஸ்டர் ரித்விக், அவினாஷ், முரளி ஷர்மா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

ஜிவி பிரகாஷ் குமார் இசையமைப்பில் உருவாகி இருந்த இப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இப்படத்தின் முதல் பாகம் ரசிகர்களின் இடையே நல்ல வரவேற்பை பெற்றிருப்பதால் இப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அதிகாரவபூர்வமான அறிவிப்பை படக்குழு அண்மையில் அறிவித்திருந்தது. இந்நிலையில் இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக நடிகர் கார்த்தி சர்தார் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் 30,000 மதிப்புள்ள வெள்ளி வாட்டர் பாட்டிலை பரிசாக வழங்கியுள்ளார். அதன் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.