நடிகை ராதிகா உடன் நடிகர் கார்த்தி இணைந்து
தீபாவளியை ஆடலுடன் மகிழ்ச்சியோடு கொண்டாடும் வீடியோ வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக திகழ்ந்தவர் தான் கார்த்தி. இவரது நடிப்பில் பொன்னியன் செல்வன் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சர்தார் திரைப்படம் அனைத்து திரையரங்குகளிலும் வெளியானது.

பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் உருவான இப்படம் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக திரையில் ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்நிலையில் நடிகர் கார்த்தி தீபாவளி திருநாளான இன்று தனது குடும்பத்தினருடன் தீபாவளியை சிறப்பாக கொண்டாடி வருகிறார்.

இந்த கொண்டாட்டத்தில் நடிகை ராதிகாவும் தனது குடும்பத்தினருடன் கலந்து கொண்டிருக்கிறார். இதில் நடிகர் கார்த்தி மற்றும் ராதிகா இருவரும் நண்பர்களுடன் சேர்ந்து நடனமாடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.