வெற்றிமாறன் இயக்கத்தில் கமல் நடிக்கும் புதிய படம்: ரசிகர்கள் எதிர்பார்ப்பு..

Web Ads

கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படம் ‘அரசன்’ படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு கோவில்பட்டியில் முடிந்துள்ளது. அடுத்தகட்டப் படப்பிடிப்பு சென்னையில் அரங்குகளில் நடைபெறவுள்ளது.

இப்படத்தை தொடர்ந்து வெற்றிமாறனின் அடுத்த படம் என்ன என்பது இன்னும் முடிவாகவில்லை. இதனிடையே வெற்றிமாறன் இயக்கத்தில் கமல்ஹாசனை நடிக்க வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனை முன்னணி தயாரிப்பாளர் ஒருவர் முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான சந்திப்புகளும் நடைபெற்றுள்ளன. இதனால் இந்தக் கூட்டணி இணைய வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

கமல்-வெற்றிமாறன் கூட்டணி என்பது பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இது தொடர்பான தகவல்கள் வெளியானதில் இருந்து, இதற்காக காத்திருப்பதாக பலரும் இணையத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.

தற்போது அன்பறிவ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் கவனம் செலுத்தவுள்ளார் கமல். அதற்குப் பிறகு வெற்றிமாறன் படம் இருக்கும் என கூறப்படுகிறது. இதற்கிடையில் கமல் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் ‘தலைவர்-173’ படமும் தொடங்கவுள்ளது.

actor kamal haasan to act in vetrimaaran direction
actor kamal haasan to act in vetrimaaran direction