படப்பிடிப்பு தளத்தில் விமானத்தை ஓட்டி மாஸ் காண்பித்துள்ள கமல்ஹாசனின் புகைப்படம் ட்ரெண்டிங்காகி வருகிறது.

இந்திய திரையுலகில் தவிர்க்க முடியாத மாபெரும் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் உலக நாயகன் கமல்ஹாசன். இவர் தற்போது பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ’இந்தியன் 2’ படப்பிடிப்பில் தீவிரமாக நடித்து வருகிறார்.

பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துவரும் இப்படத்தை லைகா மற்றும் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனங்கள் தயாரித்து வருகிறது. அனிருத் இசையமைப்பில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தாய்வானில் நிறைவடைந்ததை தொடர்ந்து தற்போது தென்னாபிரிக்காவில் நடைபெற்று வருகிறது.

இதற்காக தென்னாபிரிக்கா சென்றிருக்கும் நடிகர் கமல்ஹாசன் தொடர்ந்து தனது சமூக வலைதள பக்கத்தில் அவரது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. அந்த வகையில் அவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 22,000 அடி உயரத்தில் பைலட் அருகில் உட்கார்ந்து விமானத்தை ஓட்டும் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். பல்வேறு திறமைகளை கையாண்டு வரும் நடிகர் கமல்ஹாசனின் இந்த ரீசன்ட் புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் பல லைக்குகளையும், கமெண்ட்களையும் குவித்து வருகிறது.