நடிகர் ஜீவா தற்போது தொகுப்பாளராக புதிய நிகழ்ச்சி ஒன்றில் களம் இறங்கி இருக்கிறார். இது குறித்த தகவல் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக திகழ்பவர்தான் நடிகர் ஜீவா. இவர் தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகும் “காபி வித் காதல்” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகும் இப்படத்தில் ஜெய், ஸ்ரீகாந்த், மாளவிகா சர்மா, சம்யுக்தா, அம்ரிதா, திவ்யதர்ஷினி போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் ஜீவா மற்ற முன்னணி நட்சத்திரங்களைப் போல் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார். அதாவது ஆஹா ஓடிடித் தளத்தில் ‘சர்கார் வித் ஜீவா’ என்ற விளையாட்டு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க இருக்கிறார்.

சமீபத்தில் இந்நிகழ்ச்சிக்கான ப்ரோமோ வெளியாகிய இணையத்தில் வைரல் ஆனதை தொடர்ந்து நடிகர் ஜீவா “கச்சேரி கலகட்டப்போகுது, மச்சி ஒரு மைக் சொல்லேன்” என குறிப்பிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.