நடிகர் ஜெயம் ரவி தனது சமூக வலைதள பக்கத்தில் தனக்கு கொரோனா தொற்று உறுதியானதை பதிவின் மூலம் தெரிவித்து இருக்கிறார்.

கோலிவுட் திரை உலகில் முன்னணி நட்சத்திரமாக திகழ்பவர் தான் ஜெயம் ரவி. இவர் மணிரத்தினம் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் அருண்மொழி வர்மனாக நடித்து ரசிகர்களை அசத்தியிருக்கிறார்.

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் ஜெயம் ரவி JR30, சைரன், இறைவன் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் ஜெயம் ரவி தனக்கு கொரோனா தொற்று இருப்பதாக பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

அதில் அவர், இன்று மாலை தனக்கு கொரோனா இருப்பது தெரியவந்துள்ளதாகவும், வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும் அப்பதிவில் அவர் தெரிவித்து இருக்கிறார். மேலும் தன்னை சந்தித்தவர்களையும் உடனடியாக பரிசோதனை செய்து கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த அதிர்ச்சியான பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.