
தனது கரியர் சரியா ஜெயம் ரவி தான் காரணம் என்பது போல பரத் பேசியுள்ளார்.
தமிழ் சினிமாவில் சங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானவர் பரத். இந்த படத்தை தொடர்ந்து காதல் படத்தின் மூலம் திரையுலகில் ஹீரோவாக அறிமுகமாகி அதன் பிறகு பல்வேறு படங்களில் நடித்து வந்தார்.

சமீபத்தில் பரத்தின் ஐம்பதாவது படமாக லவ் என்ற திரைப்படம் வெளியானது. இந்த படம் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. படத்தின் ப்ரோமோஷன் கட்சியில் பரத் கலந்து கொண்டு பேசியது என்னுடைய கரியர் சரிய ஜெயம் ரவியுடன் மோதியது தான் என தெரிவித்துள்ளார்.
இவரது நடிப்பில் நேபாளி மற்றும் ஜெயம் ரவி நடிப்பில் சந்தோஷ் சுப்ரமணியன் என இரண்டு படங்களும் ஒரே நாளில் மோதிக்கொண்டது. நேபாளி திரைப்படம் அதிகமான படுக்கை அறை காட்சிகள் உடன் ஏ சர்டிபிகேட்டை பெற்றது.
அதே சமயம் சந்தோஷ் சுப்ரமணியம் திரைப்படம் குடும்ப செண்டிமெண்ட் திரைப்படம் ஆக வெளியாகவே மக்கள் நேபாளி படத்தில் புறக்கணித்து சந்தோஷ் சுப்ரமணியம் படத்தை பார்த்து ரசித்தனர்.
அப்போதிலிருந்து தான் என்னுடைய கரியர் சரியத் தொடங்கியதாக பரத் வருத்தப்பட்டு பேசியுள்ளார். மேலும் நேபாளி படத்தில் இயக்குனரை மறைமுகமாகவும் விமர்சனம் செய்துள்ளார்.
