actor jayam ravi association with dada movie director creates expectation..
actor jayam ravi association with dada movie director creates expectation..

‘ஜெயம்’ படத்தில் காதல் நாயகனாக அறிமுகமாகி, தொடர்ந்து நடித்து.. பேராண்மை படத்தில் ஆக்சன் நாயகனாக உருவெடுத்தார் ஜெயம் ரவி.

மேலும், மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் முதன்மை ரோலில் நடித்திருந்தார். அதன் பிறகு அவரின் மார்க்கெட் மீண்டும் உயர துவங்கியது. இருப்பினும், அதன் பிறகு அவரது நடிப்பில் வெளியான படங்கள் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ஓடவில்லை.

அதுமட்டுமல்லாமல், சொந்த வாழ்க்கையிலும் பல பிரச்சனைகளை ஜெயம் ரவி சந்தித்துள்ளார். தன் மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்து பெற்ற ஜெயம் ரவி, தற்போது மும்பையில் குடியேறியிருப்பதாக தகவல்கள் வருகின்றன.

தமிழ் படங்களில் நடித்து வரும் ஜெயம் ரவி ஏன் மும்பையில் குடியேறினார். அப்படியென்றால், அவர் தமிழ் படங்களில் நடிப்பதை குறைத்துக்கொள்ள இருக்கின்றாரா ? ஹிந்தி படங்களில் நடிக்க போறாரா ? என்றெல்லாம் ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகின்றனர். ஆனால், ஜெயம் ரவி முன்பை விட தற்போது அடுத்தடுத்த அதிகளவிலான படங்களில் நடிக்க இருக்கிறாராம்.

ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்து முடித்துள்ள ‘பிரதர்’ திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளது. மேலும், கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் உருவாகும் ‘காதலிக்க நேரமில்லை’ மற்றும் புதுமுக இயக்குனர் இயக்கும் ‘ஜெனி’ ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகின்றார் ஜெயம் ரவி.

இதுமட்டுமல்லாமல் கவின் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற ‘டாடா’ என்ற திரைப்படத்தை இயக்கிய கணேஷ் கே.பாபு இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார் ஜெயம் ரவி. இப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இவ்வாறு அடுத்தடுத்து பல படங்களில் அதுவும் குறிப்பாக வித்தியாசமான படங்களை கொடுக்கும் இயக்குனர்களின் இயக்கத்தில் நடிக்க கமிட்டாகி வருகின்றார் ஜெயம் ரவி. இடையில் சில காலம் தோல்வி முகத்தில் இருந்த ஜெயம் ரவி, தான் விட்ட இடத்தை மீண்டும் பிடிக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளார் என தெரிகின்றது.

இதைத்தவிர, மோகன் ராஜா இயக்கத்தில் உருவாகவிருக்கும் தனி ஒருவன்-2 படத்தையும் விரைவில் துவங்க இருக்கின்றார் ஜெயம் ரவி. எனவே, அவரது லைன் அப் மிகவும் நம்பிக்கை தரும் வகையில் இருப்பதால் மீண்டும் ஜெயம் ரவி வெற்றிப் பாதைக்கு திரும்புவார்’ என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகின்றது.

‘தடைகள் வந்தால் அதை தகர்க்க வேண்டும் என்பதில்லை; அதை தவிர்த்து சென்றாலே வெற்றி தான்’ என்பதை புரிந்து கொண்டார் ரவி.