இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன் இணைந்து ஐபிஎல் தொடரை கண்டு களித்த தனுஷின் புகைப்படம் வைரலாகி வருகிறது.

கோலிவுடில் அசைக்க முடியாத டாப் ஹீரோக்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் தனுஷ். இவர் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். மாபெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில் நடிகர் தனுஷ் இந்த ஆண்டின் ஐபிஎல் கிரிக்கெட் விளையாட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் விளையாட்டை அவ்வப்போது நேரில் சென்று கண்டு களித்து வருகிறார். அந்த வகையில் நேற்றைய தினம் சென்னை சேப்பாக்கத்தில் மும்பை – சி எஸ் கே இடையே நடந்த போட்டியை நேரில் சென்று கண்டு களித்துள்ளார்.

அப்போது நடிகர் தனுஷ் உடன் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், அனிருத் மற்றும் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர் ஒன்றாக அமர்ந்துள்ளனர். அந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.